≡ Menu

கோவிட் மற்றும் புரோனிங் நிலை – Covid-19 Proning Positions for self care & home isolation (Tamil)

கோவிட் மற்றும் புரோனிங் நிலை:
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பல மருத்துவர்கள் “புரோனிங்” மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார்கள். இது குறித்து பல ஆய்வுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. கோவிட்டால் பாதிக்கப்பட்ட பலரின் உயிரைக் காப்பாற்றும் என்று இதன் முடிவுகள் காட்டுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது இந்தியாவில் இன்னும் பரவலாக அறியப்படவில்லை. இதனை பற்றிய விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நாங்கள் தயார் செய்துள்ளோம். எங்கள் குழு இப்போது 2000 கிராமங்களில் இதனை விநியோகித்து வருகிறது.
புரோனிங் எவ்வாறு வேலை செய்கிறது?
இயல்பாகவே காற்றில் போதுமான ஆக்ஸிஜன் மற்றும் நம் நுரையீரலுக்குள் போதுமான ஆக்ஸிஜன் உள்ளது.
கோவிட் வைரஸ் நமது நுரையீரல் செல்களைத் தாக்கி, நமது நுரையீரலில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.
ஆனால் கடுமையான கோவிட் நிகழ்வுகளில் கூட, அனைத்து நுரையீரல் செல்களும் தாக்கப்படுவதில்லை. நம்மிடம் இன்னும் மில்லியன் கணக்கான நல்ல நுரையீரல் செல்கள் உள்ளன. இந்த செல்கள் பல உடம்பின் பின் பக்கத்தில் இருப்பதால், நாம் படுத்துக் கொள்ளும்போது நம் உடல் அதை கீழே அழுத்துகிறது. எனவே இந்த நல்ல நுரையீரல் செல்கள் நம் நுரையீரலுக்குள் கிடைக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்ச முடியாது.
ஆனால் நீங்கள் முன் பக்கம் படுத்திருக்கும் நிலையில் இருந்து திரும்பி ஒவ்வொரு மணி நேரமும் 15-20 நிமிடங்கள் உங்கள் வயிற்று பகுதி தரையில் படும்படி தூங்கினால், உங்கள் முதுகில் உள்ள இந்த நுரையீரல் செல்கள் வேலை செய்யத் தொடங்குகின்றன. இது உங்கள் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரிக்கிறது.
எனவே ஒரு நிலையில் மட்டுமே தூங்காமல் திருப்பிக் கொண்டே இருங்கள். ஒவ்வொரு மணி நேரமும் 15-20 நிமிடம் உங்கள் வயிற்று பகுதி கீழே இருக்கும்படி தூங்குங்கள். இதன் மூலம் பெரும்பாலான மக்களின் உயிர் காப்பாற்றப்படலாம்.
(குறிப்பு: வைரஸ் தாக்குதல் மிகவும் மோசமாக இருந்தால், இது கூட வேலை செய்யாது, அப்போதுதான் நீங்கள் மருத்துவமனைக்குச் சென்று / அல்லது வெளிப்புற ஆக்ஸிஜன் விநியோகத்தைப் பெற வேண்டும்.)
பெரும்பாலான மக்களுக்கு மருத்துவமனை பராமரிப்பு தேவையில்லை. அவர்கள் ஆக்ஸிஜன் உறிஞ்சுதலை அதிகரிகத்தாலே போதும். இதற்காக அவர்கள் தங்கள் நல்ல நுரையீரல் செல்கள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும். வெவ்வேறு நிலைகளில் (மாறி மாறி உங்கள் முதுகு மற்றும் வயிற்றில்) திரும்பி தூங்குவது இதற்கு உதவும்.
இந்த தகவலை பரவலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆராய்ச்சி சான்றுகள் தேவைப்படுபவர்களுக்கு, புரோனிங் தொடர்பான இந்திய அரசு ஆலோசனையுடன் எனது அடுத்த இடுகையைப் பாருங்கள்.
கீழேயுள்ள கருத்துக்களில், அம்பர் நாராயண் பல ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்துள்ளார். நீங்கள் “கோவிட் ப்ரோனிங்” என்று கூகிள் செய்தால், அதில் ஏராளமான கட்டுரைகள் கிடைக்கும்.
புரோவிங் பெரும்பாலான கோவிட் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது என்பது நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.